“டிஜிட்டல் இந்தியாவின் அடுத்த அதிரடி”!.. ‘அனைத்து கடைகளிலும் இனி இது கட்டாயம் வேண்டும்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 14, 2019 06:51 PM

நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து கடைகளிலும் யூபிஐ பண பரிவர்த்தனை சேவையை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

govt decides to make QR code is compulsory for all the shops

இந்தியா முழுவதும் டிஜிட்டல் பரிவர்தனையை அதிகரிக்கும் விதமாக கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் பணபரிவர்தனை செய்ய யூபிஐ, கூகுள் பே, பிம் என பல ஆப்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும், இந்த ஆப்களின் மூலம் மக்கள் பணபரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இதை மேலும் அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் QR குறியீட்டை கட்டாயமாக்க முடிவு செய்த்து மேலும் இந்த புதிய செயலுக்கு ஜிஎஸ்டி கவுன்சிலும் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இதற்கான வேலைகளை தேசிய கொடுப்பனுவுகள் கார்ப்ரேஷன் செய்து வருகிறது.

மேலும், QR குறியீடு மூலம் பணம் பரிவர்த்தனை செய்வது அதிகரிக்கும் போது வணிகர், வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் ஜிஎஸ்டி நன்மைகள் சென்றடையும். இதையடுத்து, அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கிற்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #ONLINE TRANSACTION #DIGITAL INDIA