என்னடா இது...! ஒடச்சு பார்த்தா உள்ள வேர்க்கடலையை காணோம் ..? 'புது ட்ரிக்ஸால்ல இருக்கு...' கையும் களவுமாக மாட்டிக்கிட்ட சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 12, 2020 06:10 PM

டெல்லி விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து அதிநூதன முறையில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டுப் பணம் பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Foreign money was seized at the Delhi airport

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளிடம் மத்திய நிறுவன பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த உணவுப் பொருட்களின் மீது அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். பின்னர் அவர் கொண்டு வந்த உணவுகளை சோதனை செய்தனர்.

அப்போது அதிகாரிகள் வியக்கும் வகையில் வேர்க்கடலைகளுக்குள் சுருட்டி, மடித்து மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. வேர்கடலைகளுக்குள் பணம் இருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிஸ்கட் பாக்கெட்டுகளில் உள்ள பிஸ்கட்டுகளுக்குள் மறைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பணத்தையும் கைப்பற்றினர்.

அந்த நபரிடம் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு பணத்தின் இந்திய மதிப்பு ரூ.45 லட்சம் எனப்படுகிறது. இதுதொடர்பாக மேலும் அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது

 

Tags : #FOREIGNCURRENCY