‘சிகப்பா மாறுவதுதான் அழகுன்னு இல்ல!’.. இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த ‘ஃபேர் அண்ட் லவ்லி’ நிறுவனத்தின் அதிரடி முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாபிரபல அழகு சாதன க்ரீம் தயாரிக்கும் நிறுவனம் தனது தயாரிப்பு பொருட்களில் ஒன்றான ஃபேர் அன்ட் லவ்லி என்கிற அழகு சாதனப் பொருளில் இருக்கும் ஃபேர் என்கிற வார்த்தையை நீக்கி அதற்கு பதிலாக க்ளோ என்கிற வார்த்தையை பயன்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் ஆண்கள் என பாகுபாடு இல்லாமல் உபயோகிக்கப்படும் அழகு சாதன கிரீம்களுள் ஒன்றான ஃபேரன் லவ்லி ஒரு இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பாகும். அண்மைக்காலமாக தங்களின் தயாரிப்பு பொருளில் உள்ள இந்த ஃபேர் என்கிற வார்த்தையை நீக்கப் போவதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கு விளக்கம் தந்திருக்கும் இந்த நிறுவனம், ‘கறுப்பு என்பது அழகில் குறைவானது, சிவப்பாக மாறுவது அழகு’ என்கிற பொருள் தரும்படி அழகுசாதன பெயர் அமைந்துள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இந்த மாற்றம் சில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தம்முடைய அழகு சாதனப் பொருளில் ஃபேர் என்கிற வார்த்தையை நீக்கி அதற்கு பதிலாக க்ளோ என்கிற வார்த்தையை பயன்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக ஒருவாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்தியாவில் விற்கப்படும் தங்களது இரண்டு தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்த போவதாக அறிவித்த அடுத்த வாரத்தில் ஹிந்துஸ்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஃபேர் அண்ட் லவ்லி அழகுசாதனப் பொருள் இந்தியாவில் சுமார் 560 மில்லியன் டாலர் அளவுக்கு ஆண்டிற்கு விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
