'மதுபான ஆலைகளில் சானிடைசர்ஸ் தயாரிக்க சொல்லுங்க...' 'அவர்களே பாட்டிலில் அடைக்க வேண்டாம்...' மத்திய அரசு வலியுறுத்தல்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Mar 22, 2020 11:26 AM

மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை சானிடைசர்ஸ் தயாரிப்பதற்கு பயன்படுத்துமாறு மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Emphasize the manufacture of breweries and sanitizers

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கைகளைச் சுத்தம் செய்யும் சானிடைசர்ஸ் மற்றும் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை தற்போது உருவாகியுள்ளது. பல இடங்களில் சானிடைசர்ஸ் மற்றும் முகக்கவசங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், பதுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

அதேசமயம் கொரோனா கட்டுப்படுத்த  இந்தியா அதிக முனைப்பு காட்டும் நிலையில், சானிடைசர்ஸ்க்கு மேலும் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தட்டுப்பாட்டினை தவிர்க்க மதுபான ஆலைகளை அனைத்தையும் சானிடைசர்ஸ் தயாரிக்கப் பயன்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சானிடைசர்ஸை மதுபான ஆலைகளே பாட்டில்களுக்கு அடைத்து தயார்ப்படுத்தக்கூடாது என்றும், தயாரிக்கப்பட்ட சானிடைசர்ஸ் அனைத்தும் முறையாக சானிடைசர்ஸ் தயாரிக்கும் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்நிறுவனங்களே பாட்டில்களுக்கு அடைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபான ஆலைகளை இவ்வாறு சானிடைசர்ஸ் தயாரிக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே அறிவுறுத்துமாறும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பின்னர் மதுபான ஆலைகளிடம் சானிடைசர்ஸ் தயாரிக்கும் உரிமத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பது முக்கியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #SANITIZORS