'தண்ணிய போட்டுக்கிட்டு என்கிட்டயே பிலிம் காட்டுறியா'?... 'வச்சு செஞ்ச ஒட்டகச்சிவிங்கி'... வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Aug 03, 2019 04:20 PM
போதையில் இருந்த இளைஞர் ஒருவர் ஒட்டகச்சிவிங்கி மீது சவாரி செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கஜகஸ்தானில் இருக்கும் ஷிம்கென்ட் உயிரியல் பூங்காவில், பார்வையாளர்கள் விலங்குகளை பார்வையிடுவதற்காக வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன. அப்போது விலங்குகளை பார்த்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் இருந்துள்ளார். தன்னை மறந்த நிலையில் இருந்த அந்த இளைஞர் வேலிகளைத் தாண்டி ஒட்டகச்சிவிங்கி மீது ஏறி அமர்கிறார். அருகில் இருந்தவர்கள் வேண்டாம் என, சொன்னதையும் கேட்காமல் அவர் அதன் மீது ஏறி அமர்கிறார்.
இந்நிலையில் சிறிது நேரம் அமைதியாக இருக்கும் ஒட்டகச்சிவிங்கி, திடீரென அந்த நபரை தூக்கியெறிகிறது. கீழே விழுந்த அந்த நபர் மீண்டும் வேலிகளை பிடித்து கொண்டு ஒட்டகச்சிவிங்கி மீது ஏறுகிறார். இதையடுத்து வேகமாக ஒட்டகச்சிவிங்கி அந்த நபரை தூக்கிப் போட்டு பந்தாடுகிறது. இந்த வீடியோ வைரலானதையடுத்து, அந்த நபரை கைது செய்ய உள்ளூர் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
