'மசாஜ் சென்டர் போன சைன்டிஸ்ட்...' 'வீடு திரும்பல...' 'திடீர்னு வந்த போன்கால்...' 'ஓட்டலில் தனி அறையில்...' - உச்சக்கட்ட திக்திக் நிமிடங்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் விடுமுறை தினத்தில் குதூகலமாக இருக்க ‘மசாஜ்’ சென்டர் சென்ற இளம் விஞ்ஞானி நேற்று முன்தினம் கடத்தப்பட்டுள்ளார்.
காவல் துறையினர் அவரை நேற்றிரவு மீட்டுள்ளனர். பெண் உட்பட மூன்று பேரை உடனடியாக கைது செய்தனர். டெல்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அலுவலகத்தில் பணிபுரியும் இளம் விஞ்ஞானி ஒருவர் நொய்டா குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த இளம் விஞ்ஞானி கடத்தப்பட்டதாகவும், ரூ. 10 லட்சம் பணம் உடனடியாக வேண்டும் எனவும், கொடுத்தால் விடுவிப்பதாகவும் காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. போலீஸ் கூடுதல் கமிஷனர் குமார் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பின்பு, கடத்தல் கும்பலை கண்டுபிடித்து, நேற்று நள்ளிரவு அந்த இளம் விஞ்ஞானியை மீட்டனர். மேலும், பெண் உட்பட 3 பேரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த நிகழ்வு குறித்து கூடுதல் கமிஷனர் குமார் தெரிவிக்கையில், ‘அந்த இளம் விஞ்ஞானி, விடுமுறை நாளில் ஜாலியாக இருப்பதற்காக இணையதளம் மூலம் மசாஜ் சென்டர் தொடர்பு எண்ணைத் தேடி எடுத்துள்ளார். பின்னர் அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். சனிக்கிழமையன்று, மசாஜ் சென்டரிலிருந்து வந்த ஒருவர், அவரை அழைத்துக்கொண்டு மசாஜ் செய்வதற்காக ஒரு ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார்.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் திடீரென எங்கிருந்தோ வந்த சிலர், தங்களை போலீஸ் எனக் கூறி, அந்த இளம் விஞ்ஞானியை மிரட்டினர்.
அதன்பிறகு அவர்கள் அவரை ஓட்டல் அறையில் பிணைக் கைதியாக அழைத்துச் சென்று, அவரது குடும்பத்தினரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். குடும்பத்தார், கடத்தில் கும்பலிடம் பேரம் பேசி வந்தனர்.
இந்த விஷயம் காவல் துறையினருக்கு நேற்றிரவு தெரியவர, உடனடியாக ஓட்டலில் சோதனை நடத்தி ஒரு பெண் உட்பட மூன்று குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மேலும், சிலர் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னதாக விஞ்ஞானியை கடத்திச் சென்றது தொடர்பாக டிஆர்டிஓ தலைமையகத்திலிருந்து நொய்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அடுத்தடுத்த சோதனைகளை தொடர்ந்து, நள்ளிரவில் இளம் விஞ்ஞானி மீட்கப்பட்டார்’ என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.