மாற்றுத் திறனாளி சிறுவனுடன் ஜாலியாக விளையாடும் நண்பர்கள்.. IPS அதிகாரி ஷேர் செஞ்ச நெகிழ்ச்சியான வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jul 15, 2022 06:00 PM

மாற்றுத் திறனாளி சிறுவன் கோல் அடிக்க அவனது வகுப்பு தோழர்கள் கட்டியணைத்து கொண்டாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Classmates cheer for specially abled boy as he scores a goal

Also Read | "அதை முதல்ல நிறுத்துங்க"... ட்விட்டர் CEO-க்கு வார்னிங் மெசேஜ் அனுப்பிய எலான் மஸ்க்.. என்ன ஆச்சு.?

இணைய வசதி அதிகரித்துவிட்டதன் பலனாக நாம் எளிதில் உலக தகவல்களை பெற முடிகிறது. நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் வீடியோக்களை இணையத்தில் தேடி தேடி பார்க்கும் வழக்கம் பலரிடத்திலும் இருக்கிறது. இதுபோன்ற வீடியோக்களுக்கு எப்போதுமே சமூக வலை தளங்களில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. சொல்லப்போனால், இதுபோன்ற வீடியோக்களை பார்க்கவே பலரும் சமூக வலை தளங்களில் காத்திருக்கின்றனர். அந்த வகையில் மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Classmates cheer for specially abled boy as he scores a goal

திபான்ஷு காப்ரா

சத்தீஸ்கர் மாநிலத்தின் மக்கள் தொடர்பு மற்றும் போக்குவரத்துத்துறை கமிஷனராக இருக்கிறார் திபான்ஷு காப்ரா. இவர் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் ஆக்டிவாக இயங்கிவருபவர். உலக அளவில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள், தன்னம்பிக்கை அளிக்கும் தகவல்கள், தனிமனித மேம்பாடு ஆகியவை குறித்து ஏராளமான வீடியோக்களை இவர் பகிர்ந்திருக்கிறார். இதனாலேயே இவரை 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

வைரல் வீடியோ

தீபான்ஷூ காப்ரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் பள்ளி சிறுவர்கள் சிலர் கால்பந்து விளையாடுகிறார்கள். அப்போது கைகளில் ஊன்றுகோலுடன் நிற்கும் சிறுவனிடம் பந்தை கொடுக்கிறார்கள் அவனது நண்பர்கள். கையை இறுக்கமாக குச்சியில் ஊன்றியபடி, அந்த மாற்றுத்திறனாளி சிறுவன் உதைக்க அது கோல் ஆகிறது. இதனையடுத்து அருகில் நிற்கும் சிறுவர்கள் அந்த மாற்றுத் திறனாளி மாணவரை கட்டிப்பிடித்து அவனுக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இந்த வீடியோவை பகிர்ந்து தீபான்ஷூ காப்ரா,"கால்கள் பாதிப்படைந்தாலும் அவர் கோல் அடிப்பார். ஏனென்றால் உற்சாகப்பபடுத்த நீங்கள் இருக்கிறீர்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பார்ப்போரை கண் கலங்கவைக்கும் இந்த வீடியோவை இதுவரையில் 31,000 பேர் பார்த்துள்ளனர்   இந்த பதிவில் நெட்டிசன்கள்,"சகோதரத்துவதின் உண்மையான முகம்" என்றும் "குழந்தைகள் எப்போதும் மேன்மையானவர்கள்" என்றும் கமெண்ட் போட்டுவருகின்றனர்.

 

Also Read | "மனைவி தன்னோட கணவனுக்கு செய்யக்கூடிய அதிகபட்ச கொடுமை இது".. விவாகரத்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளியிட்ட கருத்து..!

Tags : #SPECIALLY ABLED BOY #CLASSMATES #SCORES #CLASSMATES CHEER

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Classmates cheer for specially abled boy as he scores a goal | India News.