‘அங்கெல்லாம் போகக் கூடாது’... ‘வீட்டிலேயே இருங்க’... ‘சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக’... ‘ஜெகன் மோகனின் உத்தரவு’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Sep 11, 2019 12:44 PM

ஆந்திராவில், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசுக்கு எதிராக பேரணி செல்ல முயன்ற, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு, அவரது மகன் நரலோகேஷ் மற்றும் அக் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

chandrababu naidu and many more in house arrest

ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, கடந்த மே மாதம் பதவி ஏற்றது முதல் தற்போது வரை, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் அச்சுறுத்தலுக்கு ஆளாவதாகவும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டியது. மேலும் இதனை கண்டிக்கும் வகையில், கர்னுல் மாவட்டத்தில் உள்ள அதம்கூர் நகரில், பேரணி நடத்த அக்கட்சி முடிவு செய்தது. ஆனால், இந்த பேரணிக்கு, தெலுங்கு தேசம் அனுமதி வாங்கவில்லை என மாநில அரசு கூறியது.

இந்நிலையில், பேரணிக்கு தடை விதித்த போலீசார், தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு, மகன் நாரலோகேஷ் மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை வீட்டு காவலில் வைத்தனர். சந்திரபாபு வீட்டிற்கு செல்ல முயன்ற, தொண்டர்களையும் கைது செய்தனர். மேலும் நரசரோபேட்டா, சட்டினபள்ளி, பல்நாடு, குரஜலா பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

Tags : #CHANDRABABU #NAIDU #ANDRAPRADESH