'ஒரு ஆன்டி வைரஸ் என்ன பண்ணுமோ...' 'அத கபசுரக் குடிநீர் பண்ணுது...' 'நல்ல இம்யூன், வைரஸ் கண்ட்ரோல் இன்னும் பல...' - மத்திய அரசு தகவல்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கபசுரக்குடிநீர் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை தந்து நம்பிக்கையூட்டும் வகையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கபசுரக் குடிநீர் குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கபசுரக் குடிநீர் நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில், சித்த மருந்தான கபசுரக் குடிநீர் மனிதர்களுக்கு நோய் எதிப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உள்ளது, அதுமட்டுமில்லாமல் வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் ஆயுஷ் துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக கூறியுள்ளார்.
கூடுதலாக இந்த கபசுரக்குடிநீரானது, இரத்த உறைதலை தடுப்பதில் முக்கியபங்காற்றுகிறது.
மேலும் ரெட்மிசிவர் போன்ற, மிக முக்கிய நவீன ஆன்ட்டி வைரஸ் மருந்துகள் செயல்படுவது போல கபசுரக் குடிநீர் செயல்பட வாய்ப்பிருப்பதை முதல் நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.