'ஜிகுஜிகுன்னு கலரு சும்மா மின்னுதுனு நம்பி புது கார் வாங்குனா'... அங்க தான் 'ட்ரிக்ஸே இருக்கு!'.. சிக்கிய 'பிரபல' தனியார் கார் டீலர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Dec 16, 2020 05:49 PM

மாருதி சுசூகி டீலர் ஒருவர் பழைய காருக்கு பெயிண்ட் செய்து விற்பனை செய்ததாக எழுந்த புகாரை அடுத்து அவரது,  வர்த்தக உரிமையை அசாம் அரசு ரத்து செய்துள்ளது.

Car dealer trade license cancelled for painting and selling old car

அசாம் அரசின் போக்குவரத்துத் துறையிடம் வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரில், தனக்கு பழைய காரை புதிது போல பெயிண்ட் செய்து விற்பனை செய்துள்ளதாக மாருதி சுசூகி டீலர் மீது புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த புகார் விசாரிக்கப்பட்டது.  

அந்த புகாரின்படி,  கவுகாத்தியில் உள்ள ஷோரூமுக்கு நேரில் சென்று கம்ரூப் பகுதியின் போக்குவரத்து அதிகாரி காதம் தாஸ் ஆய்வு செய்ததில், அங்கு பல முரண்பாடுகளைக் கண்டுள்ளார். இவ்வாறு அதிகாரிகள் சோதனை செய்ததில், பழைய காருக்கு பெயிண்ட் அடித்து புதிய கார்கள் போல, அந்த டீலர் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்தது. இது குறித்த விசாரணையில், அந்த பாட்டர் கார் வேர்ல்ட் டீலரும், தான் செய்த இந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த மாருதி சுசூகி டீலரின் வர்த்தக உரிமையை அசாம் அரசு தற்காலிகமாக ரத்து செய்துள்ளதுடன், குறிப்பிட்ட அந்த டீலர், இது தொடர்பான விசாரணை முடியும் வரை எந்த வர்த்தகத்திலும் ஈடுபடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

இதேபோல், அசாமில் மாருதி சுசூகி டீலர்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவது இது முதல்முறை அல்ல. மேலும், 2015-16ம் ஆண்டில் ஒரு ஷோரூமின் டீலர் இதே பர்பேட்டா மாவட்டத்தில் முறைகேடாக ஈடுபட்டதால் அந்த ஷோரூம் சீல் வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Car dealer trade license cancelled for painting and selling old car | India News.