'இந்த படத்தில் எத்தனை சிறுத்தைகள் இருக்கு சொல்லுங்க'?... 'ஐஎஃப்எஸ் அதிகாரி வச்ச ட்விஸ்ட்'... வைரலாகும் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமரத்தில் இருக்கும் சிறுத்தை குறித்து ஐஎஃப்எஸ் அதிகாரி பகிர்ந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவில் மரத்தின் பின் மறைந்திருக்கும் சிறுத்தை குட்டியின் அழகிய புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி, இதில் எத்தனை சிறுத்தைகள் உள்ளன எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார். ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான், காட்டுயிர் புகைப்பட கலைஞர் மோகன் தாமஸ் என்பவர் எடுத்த ஒரு அழகிய புகைப்படத்தை ரீட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில், ‘இதில் எத்தனை சிறுத்தைகள் உள்ளன’ எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இந்த படம், ஒரு மரத்தில் அமர்ந்துள்ள இரண்டு சிறுத்தைகளைக் காட்டுகிறது. இருப்பினும், இரண்டு சிறுத்தைகளில் ஒரு சிறுத்தை மரக்கிளையில் ஒய்யாரமாக அமர்ந்துள்ளது அனைவருக்கும் தெரிகிறது. ஆனால், மற்றொரு சிறுத்தை மரத்தின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு லேசாக முகம் காட்டுகிறது.
காட்டுயிர் புகைப்படக் கலைஞர் மோகன் தாமஸ் பகிர்ந்த இந்த புகைப்படத்தை, "இதில் ஒரு சிறு சிறுத்தை குட்டியின் முகத்தைக் கண்டுபிடிக்க முடியுமா?" என்று கேட்டிருந்தார். இந்த புகைப்படம் கர்நாடகாவின் நாகராஹோல் புலிகள் சரணாலயத்தில் 2013 இல் எடுக்கப்பட்டது.
How many leopards ? https://t.co/lH3nnwnDhG
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) June 25, 2021

மற்ற செய்திகள்
