‘இனிமேல் இரண்டு ஹெல்மெட்கள் கட்டாயம்..’ அமலுக்கு வந்த புதிய விதி..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Jun 16, 2019 06:16 PM

இரண்டு ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதையும் காட்டினால் மட்டுமே இருசக்கர வாகனங்களை இனிமேல் பதிவு செய்ய முடியும் என மத்திய பிரதேச போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

buy 2 helmets to register your vehicle new rule in MP

இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் இரண்டு பேருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற விதி கடந்த வியாழன் முதல் மத்திய பிரதேசத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி  Bureau of Indian Standards (BIS) விதிகளின்படி தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்களை மட்டுமே பயன்படுத்த வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றிப் பேசியுள்ள போக்குவரத்துத்துறை ஆணையர் சைலேந்திர ஸ்ரீவத்சவா, “இருசக்கர வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் பின் இருக்கையில் இருப்பவர் என இரண்டு பேரின் பாதுகாப்பிற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இரண்டு ஹெல்மெட்கள் வாங்கி அதற்கான ரசீதைக் காட்டினால் மட்டுமே இருசக்கர வாகனப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளோம்” எனக் கூறியுள்ளார்.

Tags : #TWOHELMETS #NEWRULE