'அதுலலாம் கரெட்க்டா இருப்போம்'.. ஹைலைட்டெ இவர்தான்.. 'மிஸ் பண்ணாம கவனிங்க' .. வைரல் புகைப்படம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jun 21, 2019 12:57 PM

சர்வதேச அரங்கில், யோகா என்பது, ஆசிய கண்டத்தின் பெரும் துணைக் கண்ட நிலப்பரப்பான இந்தியத் துணைக்கண்டத்தின் சிறப்புக் குறியீடுகளுள் ஒன்றாகவே மாறியுள்ளது.

Army Dog Unit practiced Yoga on YogaDay 2019 Photos goes viral

பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. முன்னதாக கடந்த வருடம் முழுவதும் பிரதமர் மோடி, யோகாசனத்தை மக்கள் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் முயற்சியை அரசின் இலக்காகவே பிரகடனப்படுத்தினார்.

இந்த நிலையில், இன்றைய தினமான யோகா தினத்தில் பிரதமர் மோடி உட்பட நாடு முழுவதும் உள்ள அரசியலாளர்கள், அரசதிகாரிகள், மக்கள் என பலரும் யோகாசனத்தை செய்யும் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். இந்த நிலையில், ராணுவத் துறையில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களும் யோகாசனம் செய்யும் போட்டோக்கள் ட்விட்டரில் வைரலாகி வருகின்றன.

அந்த புகைப்படத்தில் எல்லா ராணுவ நாய்கள் சொற்படி கேட்டு யோகாசனம் செய்கின்றன. அதில் ஒரு நாய் மட்டும் கரெக்டாக கேமராவைப் பார்த்து போஸ் கொடுக்கவும் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

Tags : #YOGADAY #ARMY DOG