'குழந்தைகளின் எதிர்காலத்திற்காக...' - மாநிலங்களவையில் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய கேள்வி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமாநிலங்களவையில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

அதில், நாடு முழுவதும் பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தில் நுண்ணூட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்களை சேர்ப்பதற்காக அவை கொள்முதல் செய்யப்படுமா? என அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய மத்திய உணவுத்துறை அமைச்சர் தற்போது அனைத்து மாநிலங்களுக்கும் அரிசி, கோதுமை அனுப்பப்பட்டு வருகிறது. இதைத் தவிர வேறு ஏதேனும் தானியங்கள் தேவை என்றால் மாநிலங்கள் தனிப்பட்ட முறையில் விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் தற்போது வாங்கிக் கொண்டிருக்கும் அரிசி, கோதுமைக்கு மாற்று தானியம் தேவை என்றாலும் கூறலாம் என பதில் அளித்தார்.
நாடு முழுவதும் பள்ளி குழைந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தில் நுண்ணூட்டச்சத்து நிறைந்த சிறுதானியங்களை சேர்ப்பதற்காக அவை கொள்முதல் செய்யப்படுமா?
மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினா…#MidDayMeals #Millets #NutritiousMeal #Children pic.twitter.com/DW26SF32iu
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 10, 2021
