இப்படி 'ஒண்ண' என் வாழ்க்கையில பார்த்ததே இல்ல...! ப்ளீஸ்... 'இது' எங்க இருக்குனு மட்டும் சொல்லுங்க...! 'அங்க கெளம்பிட வேண்டியது தான்...' - ஃபோட்டோவை பார்த்து வியந்து போன ஆனந்த் மகேந்திரா...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇயற்கையாகவே உருவாகியுள்ள நீச்சல் குளம் ஒன்றின் புகைப்படத்தைப் பார்த்து ஆனந்த் மகேந்திரா வியப்படைந்துள்ளார்.
இந்தியாவின் தொழில்திபர்களில் முதன்மையானவர் ஆனந்த் மகேந்திரா, இவர் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வாடிக்கை. தனக்கு விருப்பமான வீடியோ மற்றும் புகைப்படங்கள், சுவாரஸ்யமான தகவல்களை அவரது பக்கத்தில் பகிர்வது வழக்கம், அதேப்போன்று, தற்போது இயற்கையாக உருவாகியிருக்கும் நீச்சல் குளத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
புகைப்படத்தில் இருக்கும் நீச்சல் குளம் ரொம்ப பிடித்து போய்விட்டதாக தெரிவித்துள்ள ஆனந்த் மகேந்திரா, இப்படி இயற்கையாக உருவான நீச்சல் குளத்தை இதுவரை தன் வாழ்நாளில் கண்டதில்லை என வியந்துள்ளார். தான் செல்ல விரும்பும் இடங்களின் பட்டியலில் இதுவும் இடம் பிடித்துவிட்டது என தெரிவித்துள்ளார். புகைப்படத்தை பகிர்ந்த சித்தார்த் பக்காரியா ஹிமாச்சல் என்பவரிடம், இந்த இயற்கை எழில் கொஞ்சும் நீச்சல் குளம் எங்கே உள்ளது? என்றும் கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த பக்காரியா, என்னுடைய டிவிட்டர் பதிவை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி சார் எனத் கூறியுள்ளார். மேலும், உத்தரக்காண்ட் மாநிலம் தார்ச்சுலா மாவட்டத்தில் உள்ள கெலா என்ற கிராமத்தில் தான் இந்த இயற்கையான நீச்சல் குளம் அமைந்துள்ளது. அதாவது இந்தியா மற்றும் நேபாளத்தின் எல்லைக்கு மிக அருகில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஆனந்த் மகேந்திரா அங்கு செல்ல வேண்டாம் என சில இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்தப் பகுதி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக உள்ளது, ஆனந்த் மகேந்திரா அங்கு சென்றால், அவரைத் தொடர்ந்து பலரும் அங்கே சென்று விடுவார்கள். இயற்கையான நீச்சல் குளம் சுற்றுலா தலமாக மாறிவிடும், பின்னர் அந்த நீச்சல் குளம் மற்றும் அந்த பகுதிகள் மாசடைந்து அதன் இயற்கையான அழகை இழப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறியுள்ளனர்.
Whaaaat?? I’ve never seen anything like this. This HAS to go in my travel bucket list as the ultimate swimming experience. Where exactly is this @Sidbakaria ? Need GPS coordinates! https://t.co/lfOciyiCyQ
— anand mahindra (@anandmahindra) July 6, 2021