‘என்னா மேஜிக்டா.. கூகுளையே கலங்கடிக்கும் தனோஸ்.. நீங்களும் இத டிரை பண்ணி பாருங்க’ வீடியோ!
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்By Siva Sankar | Apr 26, 2019 03:42 PM
மிக அண்மையில் மார்வெல் காமிக்ஸின் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் வெளியாகி அனைவரையும் மகிழ்வித்து வருகிறது.

உலகம் முழுவதுமுள்ள தீவிரமான ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், மார்வெல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த படைப்பைத் தொடர்ந்து அதே மார்வெல் ரசிகர்களுக்காக அவெஞ்சர்ஸ் மற்றும் தானோஸ் ஒரு சிறப்பம்சத்தை கூகுளில் செய்துள்ளது.
அதன்படி கூகுளின் தேடுபொறியில், Thanos என்று டைப் செய்துவிட்டு பார்த்தால், அதில் தானோஸ் பற்றிய தகவல்கள், அவெஞ்சர்ஸ், மார்வெல்ட் உள்ளிட்ட காமிக்ஸ் கதைகளின் புகைப்படங்கள், செய்திகள், கட்டுரைகள் அடுத்தடுத்த இணைய லிங்குகளில் இருக்கும். இந்த லிங்க்குகள் ஒருபுறம் இருக்க, வலதுபுறம் சிறிதாக தானோஸின் காண்ட்லெட் இருக்கும்.
அந்த படத்தை க்ளிக் செய்தால், அங்குதான் ஆச்சரியம் காத்திருக்கிறது. ஆம், தானோஸ் பற்றிய மேற்கண்ட விபரங்கள் பாதி மாயமாகிப் போகும். இந்த அரிய நிகழ்வு வைரலாகி வருகிறது. அநேகமாக அனைவரும் இதைத்தான் கூகுளில் செய்துபார்த்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
திரும்பவும் இதே காண்ட்லெட்டை க்ளிக் செய்ய, அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தில், அழிந்து போன உலகத்தை மீட்டுக்கொண்டுவருவது போலவே செய்திகள் அனைத்தும் திரும்பவும் நம் கண்களுக்கு புலப்படத் தொடங்குகின்றன. இந்த படத்துக்காக மிகவும் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த சிறப்பம்சம் பலரையும் கவர்ந்துள்ளது.
