‘இன்றே கடைசி நாள்’.. ‘மறக்காம எல்லோரும் தாக்கல் செஞ்சிருங்க’.. அறிவுறுத்திய வருமான வரித்துறை..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Selvakumar | Aug 31, 2019 04:02 PM

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்றும் அதனால் தவறாமல் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறித்தியுள்ளது.

Today is the last date for Return filing Income Tax

ஒவ்வொரு ஆண்டும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை  ஜூலை 31 -ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஒரு மாத (ஆகஸ்ட்) காலத்திற்கு கால அவகாசம் நீட்டிக்கபட்டது.

இந்நிலையில் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிள்ளது என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல் போலியானது என வருமான வரித்துறை ட்விட்டர் விளக்கம் அளித்துள்ளது. மேலும் வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்றும், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் இன்றே தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Tags : #INCOMETAXRETURN #INCOME_TAX