யார் இந்த 'நாஸ் படேல்'??... "மிந்த்ரா 'LOGO'வ கவனிச்சீங்களா?... இது பெண்களுக்கு எதிரா இருக்கு..." பகீர் புகார் கிளப்பிய 'இளம்பெண்'... மிந்த்ரா எடுத்த 'அதிரடி' நடவடிக்கை!!
முகப்பு > செய்திகள் > வணிகம்ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமான மிந்த்ரா மீது பெண் ஆர்வலர் ஒருவர் புகாரளித்திருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியிருந்தது.

அவெஸ்டா அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் தொடர்புடைய மும்பை பகுதியைச் சேர்ந்த ஆர்வலர் நாஸ் படேல் (Naaz Patel) என்பவர், மிந்த்ரா நிறுவனத்தின் லோகோவில் பெண்களுக்கு எதிராக, ஆபாசமான வகையில் அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டி, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை சைபர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். 'மிந்த்ராவின் லோகோ, பெண்களுக்கு இழிவுபடுத்தும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது' என தனது புகாரில் நாஸ் படேல் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாத நாஸ் படேல், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மும்பை சைபர் க்ரைம் காவல்துறை டிசிபி ராஷ்மி கரண்டிகர் கூறுகையில், 'மிந்த்ராவின் லோகோ பெண்களுக்கு எதிராக உள்ளது என்பதை நாங்கள் கண்டறிந்தோம். புகாரைத் தொடர்ந்து, நாங்கள் மிந்த்ரா நிறுவனத்திற்கு இ மெயில் ஒன்றை அனுப்பினோம்.
அதன் பின்னர் மிந்த்ரா அதிகாரிகள், எங்களை நேரில் வந்து சந்தித்தனர். ஒரு மாத காலத்திற்குள் லோகோவை மாற்றி விடுவதாக அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்' என டிசிபி ராஷ்மி கூறினார். அதன்படி, அவர்கள் தங்களது ஆப் மற்றும் பேக்கிங் பொருளில் லோகோவை மாற்றத் தொடங்கி விட்டது குறிப்பிடத்தக்கது.
பிரபல நிறுவனம் ஒன்றின் லோகோவில் இருக்கும் தவறைச் சுட்டிக் காட்டி, அதனை மாற்ற வைக்கும் வரை அதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டு சென்ற நாஸ் படேலிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
