"என்னது, ஐ.டி. கம்பெனிகள எல்லாம் திறக்கப்போறாங்களா?" - ஆமா, ‘க்ரீன் சிக்னல்’ கிடைச்சாச்சு... ஆனா, இந்த 'விஷயங்கள' மட்டும் மனசு'ல வெச்சுக்கங்க... - IT EMPLOYEES-க்கு வந்த 'புதிய' அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் பல முன்னணி நிறுவனங்கள் செயல்பட அரசு தடை விதித்திருந்தது.

அடுத்தடுத்த ஊரடங்கில், சில முக்கிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், முன்னதாக ஊரடங்கு காலத்தில் சென்னையில் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. Cognizant, TCS, Wipro, Accenture, HCL, Tech Mahindra, Infosys, உட்பட பல முன்னணி ஐ.டி நிறுவனங்கள் ஊரடங்கு நேரத்தில் நிறுவனத்தை முன்னெடுத்து செல்ல பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணிபுரியவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் தற்போது சில ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. அதிகபட்சம் 10 சதவீத ஊழியர்களை வரவழைத்து நிறுவனங்கள் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், நிறுவனமே அவர்களுக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை சரிவர பின்பற்றுதல் உள்ளிட்ட நிபந்தனைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
