‘இதை யாராலையும் மறக்க முடியுமா..!’ மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரும் 90’S கிட்ஸின் ஃபேவரைட் பிஸ்கட்..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Selvakumar | Aug 09, 2021 08:55 PM

மில்க் பிக்கிஸ் பிஸ்கெட்டை மீண்டும் கொண்டு வர வேண்டுமென ஒரு மில்லியன் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

90\'s kids favorite Milk Bikis back in Tamil Nadu

80 மற்றும் 90-களின் தலைமுறைக்கு மிகவும் பிடித்தமான பிஸ்கெட்டுகளுள் ஒன்று மில்க் பிக்கீஸ். தற்போது இந்த பிஸ்கெட்டின் விற்பனை மீண்டும் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

90's kids favorite Milk Bikis back in Tamil Nadu

இதுதொடர்பாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மார்க்கெட்டிங் துணைத்தலைவர் வினய் சுப்ரமணியம் கூறுகையில், ‘தமிழ்நாட்டின் நுகர்வோர்கள் சிறுவயதில் மில்க் பிக்கீஸ் சாப்பிட்டு வளர்ந்துள்ளனர். இது தமிழகத்துடன் மிகப்பெரிய உணர்ச்சிபூர்வமான தொடர்பைக் கொண்ட ஒரு பிராண்ட். இந்த காலங்களில், நாம் கடந்த காலத்தை இன்னும் அதிகமாக விரும்புகிறோம் என்பதை உணர்ந்திருக்கிறோம். சமீபத்தில் நாங்கள் நடத்திய ஒரு இணைய பிரச்சாரத்தின்போது, தமிழகத்தை சேர்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் மீண்டும் மில்க் பிக்கீஸை கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

90's kids favorite Milk Bikis back in Tamil Nadu

மில்க் பிக்கீஸ் கிளாசிக் பிஸ்கெட் தற்போது அதன் பழைய அசல் வடிவத்துடன் வெளிவருகிறது. பிரிட்டானியா என்ற எழுத்துகள் பிஸ்கட்டின் மையத்திலும், மலர் வடிவங்கள் பிஸ்கெட்டின் ஓரத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோல அட்டையில் வழக்கமான பிஸ்கெட் பாட்டில் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பிஸ்கெட்கள் அதே பால் சுவையுடனும் இருக்கும் என்றும் பிரிட்டானியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 65 கிராம் எடையுடைய இந்த பிஸ்கெட் பேக் ரூ.10 விலையில் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 90's kids favorite Milk Bikis back in Tamil Nadu | Business News.