9 மாதங்களில்.. ஒரே 'ஒரு கார்'தான் விற்பனை.. தயாரிப்பைக் கைவிடும்..பிரபல நிறுவனம்?
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்By Manjula | Oct 09, 2019 04:53 PM
ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான 9 மாதங்களில் ஒரேயொரு நானோ கார்தான் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா மோட்டர்ஸின் சார்பில் 2008-ம் ஆண்டு டாடா நானோ கார் அறிமுகம் செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு இந்த கார் சந்தைக்கு வந்தது. ஒரு லட்சம் ரூபாய் குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்யப்பட்டது. குறைந்த விலையாக இருந்தாலும் விலைக்கு ஏற்ற அம்சங்கள் இல்லை என்ற கருத்து பரவியதால் அடுத்தடுத்த ஆண்டுகளில் விற்பனை சரிந்தது.
கடந்த ஆண்டு 297 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இருப்பையும் சேர்த்து 299 கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு இதுவரை ஒரேயொரு கார்தான் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த ஆண்டு இதுவரை ஒரு நானோ கார்கூட உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், இதுவரை ஒரேயொரு கார் மட்டுமே விற்பனை ஆனதாகவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பங்குச்சந்தைக்கு தகவல் அளித்துள்ளது. வரும் ஏப்ரல் முதல் பிஎஸ் 6 விதிமுறைகள் கட்டாயமாகும் நிலையில் டாடா நானோவில் அந்த தொழில்நுட்பம் இல்லாததும் உற்பத்தியை நிறுத்த முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
