'இந்தியர்களின் MOST FAVOURITE ஹேட்ச்பேக் கார்'... 'எதிர்பார்ப்பை எகிறவைக்கும் சிறப்பம்சங்கள்'... எலைட் I20 அறிமுகம் குறித்து புதிய தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் பலரின் தேர்வாக எப்போதும் முன்னணியில் இருப்பது ஹூண்டாய் எலைட் ஐ20. தனது அட்டகாசமான லுக்கில் வாடிக்கையாளர்களைக் கவர்வதில் ஹூண்டாய் எப்பொழுதும் தவறியதில்லை. தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் தயாரிப்புகள் தரமானவை என மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் நம்பிக்கையும் முக்கிய காரணம் ஆகும். அந்த வகையில் புத்தம் டிசைனில் வேறுபட்ட மாடலாக வர இருக்கும் இந்த மூன்றாம் தலைமுறை ஹூண்டாய் எலைட் ஐ20 கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் புதிய ஹேட்ச்பேக் உலகளவில் வெளியிடப்படவிருந்தது. இருப்பினும், கோவிட் -19 காரணமாக, நிகழ்ச்சி நடக்கவில்லை. இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக எதிர்பார்க்கப்படும் இந்த கார் வரும் நவம்பர் முதல் வாரத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக CarDekho தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, எலைட் ஐ20 ஏற்கனவே சில டீலர்களுக்கும் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் இணையதளத்தில் வெளியான படங்களை வைத்துப் பார்க்கையில் அவை சென்னையில் உள்ள ஹூண்டாயின் உற்பத்தி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் டிசைன் முற்றிலும் வேறுபட்ட அம்சங்களுடன் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் டிசைன் மிக கூர்மையான அம்சங்களுடன் மாற்றப்பட்டுள்ளது. மிக முரட்டுத்தனமான பம்பர் அமைப்பு காரின் முகப்பை முற்றிலும் மாறுபட்டதாகக் காட்டுகிறது. இது ஒரு ஒரு ஸ்போர்ட்டி லுக்கை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறது.
பின்புற டிசைன் முற்றிலுமாக மாற்றப்பட்டு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறது. பக்கவாட்டில் சில டிசைன் மாறுதல்கள், புதிய அலாய் வீல்களுடன் மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதில் வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் இன்டீரியர் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் தான். பிரீமியம் காரில் இருப்பதைப் போன்ற புதிய டேஷ்போர்டு அமைப்பில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என, தனது இன்டீரியர் வடிவத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொண்டு சென்றுள்ளது ஹூண்டாய்.
இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் நேரடி இணைய வசதி மூலமாக புளூலிங்க் செயலியை இணைக்கும் வசதி இடம்பெறுவது அசத்தலான விஷயமாகும். புளூலிங்க் என்ற பிரத்தியேக செயலி மூலமாக பல்வேறு கட்டுப்பாட்டு மற்றும் கார் இயக்கத் தகவல்களைப் பெற முடியும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி இடம்பெறும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் என வழக்கம்போல் ஏராளமான பிரிமீயம் வசதிகளை அள்ளி வழங்கியுள்ளது ஹூண்டாய்.
புதிய ஹூண்டாய் எலைட் ஐ20 காரில் போஸ் ஸ்பீக்கர்கள் இடம்பெற்றிருப்பது இசை பிரியர்களுக்கு நிச்சயம் கொண்டாட்டம் தான். எஞ்சின் ஆப்ஷன்களை பொறுத்தவரை, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்பட உள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் இந்தியர்களின் மிக முக்கிய விருப்பங்களில் ஒன்றான Sun Roof இதில் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும்.
வரவிருக்கும் புதிய ஹூண்டாய் எலைட்i20 இந்தியாவில் ரூ. 6 முதல் 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் வெளியாகியுள்ள புதிய ஹூண்டாய் எலைட்i20யின் புகைப்படங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் தனது போட்டியாளர்களுக்கு ஹூண்டாய் எலைட்i20 நிச்சயம் சிம்மசொப்பனமாக விளங்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.