Beast Intro April 13
Beast Others
www.garudabazaar.com

Beast.. முதல் நாளே Theatre-ல பார்க்கும் அஜித் பட வில்லன்.. பிரபல இளம் ஹீரோ.. வைரல் Pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை, தமிழ் சினிமாவில் 90களில் இருந்து நடித்து வரும் மிக முக்கியமான இளம் ஹீரோ ஒருவர் முதல் நாளே திரையரங்கில் அமர்ந்து பார்க்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Young Tamil hero watching Vijay Beast First day viral pic

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் பூஜா ஹெக்டே, யோகி பாபு, இயக்குனர் செல்வராகவன், கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு, அனிருத் இசையமைத்திருந்தார். ஏற்கனவே இந்த படத்தில் அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இவற்றுள் அரபிக் குத்து பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஏப்ரல் 13ஆம் தேதி உலகெங்கும் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகி உள்ளது பீஸ்ட் திரைப்படம்.

இந்நிலையில் அருண் விஜய், தளபதி விஜய் நடித்து திரையரங்குகளில் வெளியாகி ஒளிபரப்பாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தை கண்டு களித்துள்ளார். முன்னதாக நடிகர் அஜீத் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படத்தில் முக்கிய வில்லனாக விக்டர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார் அருண்விஜய்.

Young Tamil hero watching Vijay Beast First day viral pic

அண்மைக் காலங்களில் குற்றம் 23, தடம், மாஃபியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த அருண் விஜய், தற்போது இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் யானை திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் உள்ளிட்டவை வெளியாகி அண்மையில் வரவேற்பு பெற்றன.

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்தை, சென்னை அண்ணாநகரில் உள்ள பிவிஆர் சினிமாஸில் நடிகர் அருண்விஜய் கண்டுகளிக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Young Tamil hero watching Vijay Beast First day viral pic

People looking for online information on Ajith Kumar, Arun Vijay, Beast, Nelson Dilipkumar, Vijay will find this news story useful.