KGF 2 ராக்கி பாயின் மாஸான தீம் மியூசிக் புரொமோ வீடியோ இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 20, 2019 01:11 PM
கன்னட திரையுலகில் அதிக பொருட் செலவில் உருவாகி இந்தியா முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ‘KGF’ திரைப்படத்தின் முக்கிய தீம் மியூசிக்கிற்கான புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
![Yash starring KGF Chapter 2 mass theme music promo is released Yash starring KGF Chapter 2 mass theme music promo is released](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/yash-starring-kgf-chapter-2-mass-theme-music-promo-is-released-photos-pictures-stills.jpg)
கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்றழைக்கப்படும் யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் KGF.பிரஷாந்த் நீல் இயக்கிய ‘கேஜிஎஃப்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் ராக்கி பாயாக யாஷ் நடிக்க, முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ‘அதீரா’ என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படத்தின் முக்கிய தீம் மியூசிக்கின் புரோமோ ஒன்றை இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தி கன்க்ளூஷன்’ என பதிவுட்டு தீம் மியூசிக்கின் புரொமோவை பகிர்ந்துள்ளார். இப்படம் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
The Conclusion😍 pic.twitter.com/Ighdirv0k7
— Ravi Basrur (@BasrurRavi) November 19, 2019