It's Official - விக்ரம் 58 படத்தில் இணைந்த KGF ஸ்டார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தின் ஹீரோயின் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Official - KGF star Srinidhi shetty on board for Vikram 58

‘கடாரம் கொண்டா2ன்’ திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தை ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும்  இணைந்து தயாாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்ஃபான் பதான் ஒப்பந்தமாகியுள்ளார்.

அதைத் தொடர்ந்து இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கன்னடத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியாகி தேசிய அளவில் கவனம் ஈர்த்த  KGF படத்தின் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தர்போது வெளியாகியுள்ளது. விக்ரம் 58 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.