''1...2...3... சோப்பு டப்பா freee....'' - சோஷியல் டிஸ்டன்சிங் கேமாம் - பிரபல டிவி தொகுப்பாளர் பகிர்ந்த வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆங்காங்கே பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி வரும் செய்திகள் மக்களை ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸிற்கு இன்னும் முறையான தீர்வு காணப்படாததால், மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

பிரபலங்கள் பலரும் தனிமைப்படுத்துதலின் அவசியம் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். மேலும் தங்களின் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நாட்களில் தங்கள் நேரத்தை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பதை பதிவிட அது அவ்வப்போது வைரலாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பிரபல தொகுப்பாளர் விஜே மணிமேகலை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிறுவர்களுடன் வீட்டுக்குள் ஒழிந்து விளையாட்டு விளையாடுவதாக பகிர்ந்துள்ளார். அந்த விளையாட்டில் தங்களை பிடிக்க வரும் நபரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்காக சாட் பூட் த்ரீ க்கு பதிலாக அப்பன் டிப்பன் என்ற பாடலை பாடும் அவர், இறுதியாக யூ கோ ஃப்ரி என்று யார் முன் வருகிறதோ அவர்கள் தப்பித்து விடுவார்கள். இறுதியாக உள்ளவர்கள் தங்களை பிடிக்க வரவேண்டும்.

இதனை வீடியோவாக பதிவிட்ட அவர், எப்படியோ சின்ன பசங்கள ஏமாத்தியாச்சு அன விட Clever-ஆ இருக்காங்க. ஃபேமிலி டிஸ்டன்சிங் கேம் எக்ட்ரா அலெர்ட் வீட்டுக்குள் ஒழிஞ்சு விளையாட்டு'' என்று தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor