‘ஆக்ஷன்’ தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்தப்படத்தின் மாஸான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வெங்கட் மோகன் இயக்கத்தில் வெளியான ‘அயோக்யா’ திரைப்படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆக்ஷன்’ திரைப்படம் இன்று (நவ.15) வெளியாகிறது.

Vishal's next film titled as Chakra and first look is released now

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தமன்னா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் விஷால் நடிப்பில் ஏற்கனவே வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற ‘இரும்புத்திரை’ படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘சக்ரா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் இன்று வெளியிட்டார்.