சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் ரிலீஸ் குறித்த சர்ச்சை - தயாரிப்பு தரப்பு விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' படத்தில் நடித்துள்ளார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Producer Clarification about Sivakarthikeyan's hero Release controversy

இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் C.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜூன், அபய்  தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ரிலீஸ் சென்னை உயர்நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவியது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு தரப்பு இதுகுறித்து மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்த படம் சொன்ன தேதியில் வெளியாகும் ரசிகர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.