www.garudabazaar.com

விஷால் பிறந்த நாளில் ‘வேற லெவல் டைட்டிலுடன்’ வெளியான #Vishal31 ஃபர்ஸ்ட் லுக்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகும் 31-வது படத்துக்கு பெயரிடப்படாமல், முழுக்க படப்பிடிப்பிலேயே கவனம் செலுத்தி வந்தது படக்குழு.

vishal31 veeramae vaagai soodum firstlook விஷால் வீரமே வாகை சூடும்

இதனிடையே இன்று (ஆகஸ்ட் 29) விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் து.பா.சரவணன் இயக்கும் இந்த விஷால்-31 படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த படத்துக்கு 'வீரமே வாகை சூடும்' எனத் தலைப்பிட்டுள்ளனர். டிம்பில் ஹயாத்தி நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப் பட்டது போலவே இன்னொரு நெகிழ்ச்சியான செயலும் விஷாலின் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

vishal31 veeramae vaagai soodum firstlook விஷால் வீரமே வாகை சூடும்

ஆம்,  அறக்கட்டளை ஒன்றை அமைத்து பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை அவ்வப்போது செய்து வருவது நடிகர் விஷாலின் வழக்கம். இயல்பாகவே உதவும் குணம் கொண்ட விஷால் தன் பிறந்த நாளின்போது ஏராளமான நலத்திட்ட உதவிகளைச் செய்வார்.

vishal31 veeramae vaagai soodum firstlook விஷால் வீரமே வாகை சூடும்

இந்த வருடமும் தனது பிறந்தநாளை முன்னிட்டுபொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கி மிக எளிமையான முறையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார் விஷால். மேலும் விஷால் ரசிகர்கள் பல ஊர்களிலும் ரத்த தானம் வழங்கி விஷால் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Also Read: போடு வெடிய.. கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் "பத்து தல" .. அடுத்த கட்ட மாஸ் அப்டேட்..

தொடர்புடைய இணைப்புகள்

vishal31 veeramae vaagai soodum firstlook விஷால் வீரமே வாகை சூடும்

People looking for online information on ThuPaSaravanan, Veeramae vaagai soodum, Veeramaevaagaisoodum, Veeramaevaagaisoodumfirstlook, Veeramaevaagaisoodumfirstlookreleased, Vishal, Vishal31 will find this news story useful.