தளபதி 65 டைரக்டர்... இது யாரு பார்த்த வேலைன்னு தெரியல..! விக்ரம் பட இயக்குநர் என்ன சொல்கிறார்.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் 65-வது படத்தின் இயக்குநர் குறித்த தகவலுக்கு விக்ரமின் கோப்ரா பட இயக்குநர் பதிலளித்துள்ளார்.

விஜய் படம் பற்றி அஜய் ஞானமுத்து கருத்து | vikram's cobra director on vijay's next thalapathy 65 project direction

டிமான்டி காலனி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இதையடுத்து இவர் அதர்வா, நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தை இயக்கினார். இத்திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தற்போது விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். மிர்னாலினி ரவி, ஶ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ஹிட் அடித்தது.

இந்நிலையில் விஜய்யின் 65-வது படத்தின் இயக்குநர் குறித்த பதிவுக்கு அவர் பதிலளித்துள்ளார். அஜய் ஞானமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தில், அவர் தளபதி-65 படத்தை இயக்க போகிறார் என்று இருப்பதை ரசிகர் ஒருவர் சுட்டிகாட்ட, அதற்கு இல்லை என பதிலளித்துள்ளார் அஜய் ஞானமுத்து. மேலும் ''இது யார் பார்த்த வேலைன்னு தெரியல'' என நகைச்சுவையாக அவர் பதிவிட்டுள்ளார். விஜய்யின் 65-வது படத்தை இயக்க போவது ஏ.ஆர்.முருகதாஸ் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor