Nenjuku Needhi

VIKRAM AUDIO LAUNCH: பத்தல பத்தல பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சிம்பு.. விஜய் TV வெளியிட்ட சூப்பர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்; படத்தின் இசை வெளியீட்டு விழா முன்னோட்ட வீடியோ ப்ரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகி உள்ளது.

Vikram Movie Audio Launch Simbhu Dance for Pathala Pathala

"விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Vikram Movie Audio Launch Simbhu Dance for Pathala Pathala

விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் கடந்த மே 15 ஆம் தேதி, ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது.

இவ்விழாவில், இயக்குனர்கள் சந்தான பாரதி, லோகேஷ் கனகராஜ், பா.ரஞ்சித், கமல்ஹாசன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, விக்ரம் பட குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் படத்தின் டிரெய்லர் & இசை வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் பேசிய பா.ரஞ்சித் & கமல்ஹாசன்,  தங்களது அடுத்த படங்களை உறுதி செய்தனர். மேலும் படக்குழுவினர் விக்ரம் படம் பற்றிய பல சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டனர்.

விக்ரம் பட ஆடியோ வெளியீட்டு விழா, வரும் 22 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று புதிய ப்ரோமோ வடிவில் வெளியிடப்படடுள்ளது. இதில் சிம்பு, நடன இயக்குனர் சாண்டியுடன் பத்தல பத்தல பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சில நொடி வீடியோவும் வெளியிடப்பட்டது.

Vikram Movie Audio Launch Simbhu Dance for Pathala Pathala

இந்த ப்ரோமோவில் விஜய் சேதுபதி, சிம்பு, உதயநிதி ஸ்டாலின், அனிருத் பேசிய காணொளி துணுக்குகள் இடம் பெற்றுள்ளன.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

VIKRAM AUDIO LAUNCH: பத்தல பத்தல பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சிம்பு.. விஜய் TV வெளியிட்ட சூப்பர் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vikram Movie Audio Launch Simbhu Dance for Pathala Pathala

People looking for online information on Audio Lauch, Kamal Haasan, Simbhu, Str, Vijay tv, Vikram will find this news story useful.