கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் அப்டேட்! வைரலாகும் BTS புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

vikram movie second schedule shooting update bts image went viral

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர்.

vikram movie second schedule shooting update bts image went viral

சில மாதங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு காரைக்குடியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தியது.  பின் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியது. 

vikram movie second schedule shooting update bts image went viral

இந்நிலையில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடந்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.  மேலும் படப்பிடிப்பின் நடுவே எடுத்த BTS புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

vikram movie second schedule shooting update bts image went viral

இதில் பைக்கில் கமல்ஹாசனுடன் லோகேஷ் கனகராஜ், கிரிஷ் கங்காதரன், அன்பறிவ் சகோதரர்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vikram movie second schedule shooting update bts image went viral

People looking for online information on Fahad Faasil, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram will find this news story useful.