“பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை..” - தளபதி விஜய்யின் பிகில் ரிலீஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பரவிய வதந்திக்கு அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Vijay's Bigil release date rumors ends Archana Kalpathi

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்.19ம் தேதி, சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதனிடையே, தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, “சென்சாருக்கு அனுப்பிய பிறகே ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வரும். அதுவரை யாரும் வதந்தி பரப்ப வேண்டாம். பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைக்கும் அந்த ஆகச்சிறந்த நாளை நாங்களே அறிவிப்போம் நம்புங்கள்.. இன்று மாலை 6 மணிக்கு புதிய பிகில் போஸ்டர் வெளியாகும்” என்றும் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் அப்பா-மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் இருந்து வெளியான சிங்கப்பெண்ணே, வெறித்தனம் ஆகிய பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவுக்கான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.