அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் இவர்களா - தர்ஷன் சொல்வது இவர்களை தான் - புரொமோ வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Sep 17, 2019 12:48 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய தினம் போட்டியாளர்கள் முன்பு பேசிய Ticket to Finale பற்றி தெரிவித்தது.

அதன் படி, இந்த வாரம் முழுவதும் கொடுக்கப்படும் டாஸ்க்குகளில் சிறந்து விளங்குபவர்கள் நேரடியாக 100 நாட்கள் வரை வரலாம் என்று கூறப்பட்டது. மேலும் இந்த வாரத்துக்கான நாமினேஷனில் ஷெரின், கவின், சேரன், லாஸ்லியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
தற்போது உள்ளே ஷெரின், சாண்டி, சேரன், கவின், லாஸ்லியா, முகென், தர்ஷண் ஆகியோர் உள்ளார்கள். இனி தான் நிஜமான போட்டியே ஆரம்பம் என்பது போல உள்ளிருக்கும் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் மாறிவருகிறது.
தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் . சுயசிந்தனையும், தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என கவினையும், மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என சேரனையும் சொல்லி காட்டுகிறார். லாஸ்லியாவும், மற்ற போட்டியாளர்களும் இதனை அதிர்ச்சியுடன் பார்க்கிறார்கள்.
அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் இவர்களா - தர்ஷன் சொல்வது இவர்களை தான் - புரொமோ வீடியோ! வீடியோ