விஜய்யின் பிகிலில் கோல் அடித்த நாயகி... அடுத்த படம் இது தான் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்தவர் அம்ரிதா ஐயர். இவர் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

vijay's bigil actress amritha Aiyer's next movie

கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் 'பிகில்'. இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பெண்கள் ஃபுட்பால் டீமை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், ஃபுட்பால் ப்ளேயர்களாக பெண்கள் சிலர் நடித்திருந்தனர். ரோபோ ஷங்கரின் மகள், நடிகை வர்ஷா போலம்மா, அம்ரிதா ஐயர், ரெபா மோனிக்கா உள்ளிட்டோர் பெண்கள் அணியின் ப்ளேயர்களாக நடித்திருந்தனர்.

இந்த நிலையில், அம்ரிதா ஐயரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் ராம் போதினேனி நடிக்கும் 'ரெட்' எனும் தெலுங்கு படத்தில் அம்ரிதா ஐயர் நடிக்கவுள்ளார். திருமலா கிஷோர் இயக்கும் இத்திரைப்படத்தில் தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜும் நடிக்கிறாற். மேலும் நடிகை மாளவிகா ஷர்மாவும் இப்படத்தில் நடிக்கிறார். அருன் விஜய் நடிப்பில் தமிழில் வெளியான தடம் படத்தின் ரிமேக் தான் இது எனவும் சொல்லப்படுகிறது.

Entertainment sub editor