விஜய்யின் மாஸ்டர் - அந்த கண்ண பாத்தாக்கா.. யுவன் பாடிய செம லவ் பாடல் இதோ.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது.
![விஜய்யின் மாஸ்டர் பாடல் வெளியீடு | vijay vijay sethupathy anirudh lokesh kanagaraj's master song antha kanna paathakka to be released today விஜய்யின் மாஸ்டர் பாடல் வெளியீடு | vijay vijay sethupathy anirudh lokesh kanagaraj's master song antha kanna paathakka to be released today](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/vijay-vijay-sethupathy-anirudh-lokesh-kanagarajs-master-song-antha-kanna-paathakka-to-be-released-today-news-2.jpg)
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாக ஹிட் அடித்துள்ளன.
இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இருந்து அடுத்த லிரிக் வீடியோ வெளியாவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் யுவன்ஷங்கர் ராஜா பாடியுள்ள, 'அந்த கண்ண பாத்தாக்கா' என்கிற பாடல் இன்று 11 மணிக்கு வெளியாகவுள்ளது. இப்பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார்.
இதனிடையே தற்போது மாஸ்டர் படத்தில் இருந்து அந்த கண்ண பாத்தாக்க என்கிற பாடல் வெளியாகியுள்ளது. விஜய்யின் ஸ்டைலிஷ் லுக்குடன் இந்த லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.
#AndhaKannaPaathaakaa and you run out of words! 🥰❤️
Presenting the official lyric video of the mesmerizing melody 💟➡️ https://t.co/AswMXUSycB@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @XBFilmCreators @MalavikaM_ @thisisysr @VigneshShivN #Master pic.twitter.com/r0gVAqyY5p
— Sony Music South (@SonyMusicSouth) March 23, 2020
விஜய்யின் மாஸ்டர் - அந்த கண்ண பாத்தாக்கா.. யுவன் பாடிய செம லவ் பாடல் இதோ. வீடியோ