‘நீ அவனுக்கு Close Friend-னு நினைக்கிறன்னா...’ - கவினுக்காக சாண்டியிடம் மல்லுக்கட்டும் லாஸ்லியா
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 20, 2019 11:06 AM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கிற்காக கடுமையான டாஸ்குகளை விளையாடி வருகின்றனர்.

இந்நிகழ்ச்சி விரைவில் நிறைவுபெறவுள்ள நிலையில், இந்த வாரம் டாஸ்கை மையமாகக் கொண்டு போட்டியாளர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதலே நெருக்கமாக இருந்து வந்த கவின் மற்றும் சாண்டி இடையே தற்போது மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வீடியோவில், லாஸ்லியா மற்றும் சாண்டி இடையே வாக்குவாதம் நிலவுகிறது. அதில் கவினுக்காக சாண்டியிடம் பரிந்துப் பேசிய லாஸ்லியா, கவினை நெருக்கமான நண்பனா நினைத்திருந்தா, ஏன் அவனோட பலூன உடைச்ச? பாயிண்ட்ஸ் வர டாஸ்கில் ஏன் அவனுக்கு பதில் எனக்கு போட்ட? இத்தனை பிரச்சனைக்கு அப்புறமும் அவன் இப்போ விளையாடனும்னு இருக்கான் தானே என பேச, என்னை கொஞ்சம் பேச விடு.. இல்லாட்டி நீயே பேசிட்டு அப்படியே போயிடு என சாண்டி காட்டமாக கூறுகிறார்.
முஸ்தபா முஸ்தபா ரேஞ்சில் பிக் பாஸ் வீட்டில் சுற்றி வந்த கவின், சாண்டி இடையே மனகசப்பு ஏற்பட லாஸ்லியா தான் காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது.
‘நீ அவனுக்கு CLOSE FRIEND-னு நினைக்கிறன்னா...’ - கவினுக்காக சாண்டியிடம் மல்லுக்கட்டும் லாஸ்லியா வீடியோ