www.garudabazaar.com

'யாரெல்லாம் கலந்துக்கப்போறாங்கனு Guess பண்ணுங்க' - பிக்பாஸ் சீசன் 4 புரோமோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் இரண்டு புரொமோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து நிகழ்ச்சியின் ஒளிபரப்பு எப்பொழது துவங்கும், யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்ற விவாதங்களால் சமூக வலைதளங்கள் பரபரப்பாகி வருகிறது.

Vijay TV and Kamal Haasan's Bigg Boss Latest Promo goes Viral | விஜய் டிவி மற்றும் கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 4 புரொமோ

இந்நிலையில் விஜய் டிவி தற்போது புரொமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிக்பாஸில் போட்டியாளர்கள் யார் என்று Guess பண்ணுங்க, லிஸ்டு மேட்ச் ஆகுதானு பார்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள்  தங்களுக்கு விருப்பமான பிரபலங்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4 அல்லது 14 ஆம் தேதி முதல் துவங்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட்டில் ஷில்பா மஞ்சுநாத், ஷாலு ஷாமு, லக்ஷ்மி மேனன், ரியோ ராஜ், இயக்குநரும் நடிகருமான அனுமோகன்,  குக் வித் கோமாளி புகழ், அமுதவாணன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், பிக்பாஸ் அம்ரிதா, விஜே தர்ஷன் உள்ளிட்ட பெயர்களும் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பவர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay TV and Kamal Haasan's Bigg Boss Latest Promo goes Viral | விஜய் டிவி மற்றும் கமல்ஹாசனின் பிக்பாஸ் சீசன் 4 புரொமோ

People looking for online information on Bigg Boss 4, Kamal Haasan, Vijay tv will find this news story useful.