Pattamboochi

விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தின் வேற மாரி 2nd LOOK போஸ்டர்.. எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் நடிக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

Vijay Starring Varisu Movie Second Look Poster Released

Also Read | ஜாலியோ ஜிம்கானா.. சிவகார்த்திகேயன் வெளியிட்ட 'பீஸ்ட்' படத்தின் வேற லெவல் BTS போட்டோ!

இன்று நடிகர் விஜய் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு வாரிசு படக்குழு நேற்று முதல் லுக் போஸ்டரை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்த போஸ்டரில் காய்கறி லாரியில் விஜய் பயணிப்பது போல புகைப்படம் இடம்பெற்றுள்ளது. விஜய் உடன் சிறுவர் சிறுமியர் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.

இந்த வாரிசு படத்துக்கு தெலுங்கில் 'வாராசுடு' எனவும் பெயரிடப்பட்டுள்ளது.  The Boss Returns என்று துணை தலைப்பு இரண்டு மொழிகளின் போஸ்டரிலும் இடம்பெற்றுள்ளது.  தெலுங்கு போஸ்டரில் PVP நிறுவனத்தின் லோகோவும் இடம்பெற்றுள்ளது.

Vijay Starring Varisu Movie Second Look Poster Released

இப்படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் பணியாற்ற உள்ளார்.  இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார்.

Vijay Starring Varisu Movie Second Look Poster Released

இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்கிறார். நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு , நடிகை சங்கீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத், சென்னை ஆகிய இடங்களில் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | அஜித் நடிப்பில் 90ஸ் கிட்ஸின் ஃபேவ்ரைட் படம்.. இயக்குநருக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம்..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Starring Varisu Movie Second Look Poster Released

People looking for online information on Thalapathy 66 Movie, Thalapathy Vijay, Varisu, Varisu Movie Second Look Poster, Varisu second look poster, Vijay Varisu Second Look Poster will find this news story useful.