செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த மே 31 ஆம் தேதி வெளியான படம் 'என்ஜிகே'. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், பாலா சிங், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் சிலருக்கு புரியவில்லை என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றது. ஒரு சிலர் சூர்யாவின் நடவடிக்கைகள் குறித்து காரணங்கள் கூறப்பட்டது.
மேலும், இயக்குநர் செல்வராகவனும் இந்த படத்தின் சில காட்சிளை குறிப்பிட்டு ரசிகர்களிடம் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இந்த படத்தின் மறைமுக தகவல்கள் குறித்து இயக்குநர் செல்வராகவன் Behindwoods Tvக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.
அதில், அன்னைக்கு நைட் 'நான் வானதி'னு ரகுல் சொன்னதும், என்ஜிகே அவங்கள பத்தி எல்லா டீட்டெய்லும் சொல்றாரு. அதுக்கப்புறம் இரண்டு பேரும் ரிஸர்ச் பன்றாங்க. ஆட்சியில் இருக்கும் முதல்வருக்கு எதிராக எதாவது ஆதாரம் இருக்கிறதா என்று பார்க்குறாங்க. அப்போ அவர் மேல ஸ்பார்க் இருக்குனு கூப்டுருக்காங்க. நைட்டு 2 மணிக்கு. அது அவங்களுடைய டென்ட் .ரெண்டு பேருக்கும் ஒருவர் மேல் ஒருவருக்கும் ஈர்ப்பு இருந்தது. அந்த இரவு அவர்கள் இருவருக்கும் இடையில் என்ன நடந்தது. அத உங்க முடிவுக்கே விட்டுடறேன்.
பின்னர் என்ஜேக வீட்டுக்கு வரும் போது, அவர் மேல பர்ஃபியூம் வாசன அடிக்குதுனு அவர் மனைவி சொல்றா. ஒரு இரவை சக்தி வாய்ந்த அரசியல் பிரமுகருடன் இணைந்து ஒன்றாக கழித்திருக்கிறார். இருவரும் முப்பதுகளின் மையத்தில் இருக்கிறார்கள். ரெண்டு பேரும் குளிச்சிட்டு, குளியல் உடையிலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுக்கு மேலேயா சொல்லனும்' என்றார்.
'அந்த காட்சியில் என்ஜிகேவும் வானதியும் செக்ஸ் வச்சுக்கிட்டாங்களா ?' வீடியோ