Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

ஹிந்தியில் அறிமுகம் ஆகும் விஜய் சேதுபதி... அதுவும் இந்த ஹீரோயினுடான... குஷியில் ரசிகர்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு  வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன்  3 தேசிய விருதுகளையும் வென்றது.இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். பொன்மகள் வந்தாள்' படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கவுள்ளார். இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடல் இழைத்து தயாராகி வருகிறார். 'அந்தாதூன்' படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்க இருக்கிறார்.

vijay sethupathi to do this hindi film ஹிந்தியில் அறிமுகம் ஆகும் விஜய் சேதுபதி

இந்நிலையில் வைரலாகி வரும் தகவல் என்னவென்றால் அந்தாதூன் படத்தின் மலையாள ரீமேக்கை பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மலையாளத்தில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பிருத்திவிராஜ் நடிக்க இருப்பதாகவும் ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதெல்லாம் ஒருபுறமிருக்க அந்தாதூன் திரைப்படத்தின் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் அடுத்து இயக்கப் போகும் படத்தில் நமது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.

vijay sethupathi to do this hindi film ஹிந்தியில் அறிமுகம் ஆகும் விஜய் சேதுபதி

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட்டின் பிரபல நடிகை கத்ரீனா கைஃப் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு 'மெர்ரி கிறிஸ்மஸ்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரமேஷ் டுரானி தயாரிக்கிறார். மேலும் புனேவில் படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வரும் ஏப்ரல் மாதத்தில் படம் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் மூலம் ஹிந்தியிலும் விஜய் சேதுபதி முத்திரை பதிப்பார் என்று அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi to do this hindi film ஹிந்தியில் அறிமுகம் ஆகும் விஜய் சேதுபதி

People looking for online information on Vijay Sethupathi will find this news story useful.