Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

நடிகை கங்கனா நடிக்கும் 'தலைவி'... ரிலீஸ் தேதியை அதிரடியாக அறிவித்த படக்குழு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளான இன்று பலரும் அவரை பற்றி தான் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் #jayalalithaa #HBDAmma ஆகிய ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் 'தலைவி'. ஏ.எல்.விஜய் இயக்கும் இத்திரைப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இத்திரைப்படத்துக்கு இசையமைக்கிறார். எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

new update on kangana's thalaivi film நடிகை கங்கனா நடிக்கும் 'தலைவி'

அதேபோல் இளம் வயது ஜெயலலிதாவின் லுக்கில் இருக்கும் கங்கனா ரனாவத்தின் போட்டோ ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. எந்தவிதா ப்ராஸ்தடிக் மேக்கப்பும் இல்லாமல், ஸ்பெஷல் எஃபக்ட் இல்லாமல், கங்கனாவின் மன உறுதியே தலைவி படத்தின் இந்த லுக்கிற்கு காரணம் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.  இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தலைவி படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியிருக்கும் பதிவில் முக்கிய அப்டேட் ஒன்றை சற்றுமுன் வெளியிட்டுள்ளனர். ஆம் மிகவும் எதிர்பார்க்கப்படும் தலைவி திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thalaivi

மேலும் செய்திகள்

new update on kangana's thalaivi film நடிகை கங்கனா நடிக்கும் 'தலைவி'

People looking for online information on Thalaivi will find this news story useful.