www.garudabazaar.com

LATEST: விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தின் சூப்பரான புதிய டிரெய்லர்! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ள படம் "லாபம்".

vijay sethupathi laabam movie second trailer released

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

vijay sethupathi laabam movie second trailer released

கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் லாபம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவால்  மரணமடைந்தார். பின்னர் படத்தின் மீதி காட்சிகள்இயக்குனர்  ஜனநாதனின் உதவி இயக்குநர்கள் மூலம்  படமாக்கப்பட்டது. 

vijay sethupathi laabam movie second trailer released

மார்க்சிய பொதுவுடமை சிந்தனைகள் எப்பொழுதும் இயக்குனர் ஜனநாதன் அவர்களின் படங்களில் இருக்கும். வர்க்க முரண்களை தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பேசிய மார்க்சிய இயக்குனர்களில் ஜனநாதனும் ஒருவர். இந்த படத்திலும் ஆணித்தரமாக வர்க்க அரசியலுடன் மார்க்கசிய சிந்தனைகளை பேசியுள்ளார். படத்தின் டிரெய்லரில் அது எதிரொலிக்கிறது. லாபம் திரைப்படம் வருகிற செப்டம்பர் 9ம் தேதி தியேட்டரில் வெளிவர உள்ளது.

LATEST: விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தின் சூப்பரான புதிய டிரெய்லர்! எப்படி இருக்கு? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi laabam movie second trailer released

People looking for online information on Shruthi Haasan, Vijay Sethupathi will find this news story useful.