www.garudabazaar.com

அப்றம் ஏன் இந்த மனுசன எல்லாருக்கும் பிடிக்காது?.. பட நிகழ்வில் நெகிழவைத்த விஜய் சேதுபதி! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார்.

vijay sethupathi heatfelt laabam pressmeet video விஜய் சேதுபதி

அருண் விஜய் & ஷாம் நடிப்பில் ‘இயற்கை’, ஜெயம் ரவி நடிப்பில் ‘பேராண்மை’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் விஜய் சேதுபதி & ஆர்யா நடிப்பில் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

vijay sethupathi heatfelt laabam pressmeet video விஜய் சேதுபதி

இதனைத் தொடர்ந்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய திரைப்படம்தான் ‘லாபம்’. விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தின் நிறைவு பணிகள் முடியும் முன்பே இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் யாரும் எதிர்பாராத விதமாக உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

எனினும் இந்த திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்து படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி லாபம் திரைப்படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

vijay sethupathi heatfelt laabam pressmeet video விஜய் சேதுபதி

இந்த பட நிகழ்வுக்கு வருகை தந்த விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொண்ட விதம் வீடியோவில் பதிவாகியதை அடுத்து வைரலாகி வருகிறது. இந்த நிகழ்வில் எஸ்.பி.ஜனநாதனின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய விஜய் சேதுபதி, இந்நிகழ்வுக்கு வருகை தரும்போது, தன்னை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கேமராமேன் தடுமாறி கீழே விழ போக, அவரிடம் “பார்த்து பார்த்து.. கீழே விழுந்ததுடாதீங்க!!” என கனிவாக கூறுகிறார்.

vijay sethupathi heatfelt laabam pressmeet video விஜய் சேதுபதி

எப்போதும் எதார்த்தமாக பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என யாரிடம் வேண்டுமானாலும் யோசிக்காமல் பேசக்கூடிய அளவுக்கு இயல்பான நடிகரான விஜய் சேதுபதியின் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

‘லாபம்’ திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி சன் டிவியில் மாலை 6.30க்கு வெளியாகிறது. 

vijay sethupathi heatfelt laabam pressmeet video விஜய் சேதுபதி

இதேபோல் செப்டம்பர் 17-ஆம் தேதி விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த ‘அனபெல் சேதுபதி’ என்கிற திரைப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.

vijay sethupathi heatfelt laabam pressmeet video விஜய் சேதுபதி

இந்த படத்துடன் செப்டம்பர் மாதம் மட்டும் விஜய் சேதுபதி நடித்த 3 திரைப்படங்கள் வெளியாகவிருப்பதால் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் குதூகலத்தில் உள்ளனர்.

Also Read: போதைப்பொருள் வழக்கில் கைது ஆனது வேற சோனியா அகர்வால்!!.. கடுப்பான ‘காதல் கொண்டேன்’ நடிகை!

அப்றம் ஏன் இந்த மனுசன எல்லாருக்கும் பிடிக்காது?.. பட நிகழ்வில் நெகிழவைத்த விஜய் சேதுபதி! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

vijay sethupathi heatfelt laabam pressmeet video விஜய் சேதுபதி

People looking for online information on லாபம், விஜய் சேதுபதி, LAABAM, S.P. Jananathan, Vijay Sethupathi will find this news story useful.