விஜய்யின் மாஸ்டர் - தள்ளிப்போன ரிலீஸ்.. புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு - கூடவே ஒரு மெசேஜ்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. 

மாஸ்டர் ரிலீஸ் - தயாரிப்பாளர் சொல்லும் தகவல் | vijay master new poster and producer xavier britto message

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, மாஸ்டர் மகேந்திரன், அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் வரவில்லை என்றால், மாஸ்டர் படம் இன்று வெளியாகியிருக்கும் என ரசிகர்கள் ட்விட்டரில் சோகமாக வலம் வர, அவர்களுக்காக மாஸ்டர் டீம் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு, ''உங்களை போல, நாங்களும் உங்கள் வரவை மிஸ் செய்கிறோம், சீக்கிரமே கொரோனா வைரஸூக்கான மருந்தை ஒரு மாஸ்டர் மைன்ட் கண்டிபிடிக்கட்டும், விரைவில் இன்னும் வலிமையுடன் வருகிறோம் நண்பா'' என பதிவிட்டுள்ளனர். மேலும் படத்தின் லைன் ப்ரொட்யூசரான ஜகதீஷ், ''முதல் நாள் முதல் காட்சியின் கொண்டாட்டம் நின்று போய்விடவில்லை, கொஞ்சம் தள்ளி போய் இருக்கிறது, விரைவில் மாஸ்டரை நாம் அனைவரும் கொண்டாடலாம்'' என பதிவிட்டுள்ளார். படக்குழுவிடம் இருந்து வந்த இந்த பதிவால், ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

 

Entertainment sub editor