Its Official - விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் ப்ளான் இதுதான்.! வெளியான புதிய தகவல்... தளபதி வேறலெவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. 

விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் அப்டேட் | vijay lokesh kanagaraj vijay sethupathi's master release update is here

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கிறார். மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு புதிய அப்டேட் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பிரபல தியேட்டர் நிறுவனமான ஐ நாக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாஸ்டர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் சினிமா பயணத்தில் ஐந்து மொழிகளில் அவர் படம் வெளியாவது இதுவே முதல் முறையாகும். படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் அப்டேட்டிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த புதிய தகவல் உற்சாகத்தை அளித்துள்ளது. 

 

Entertainment sub editor