'சம்பவம் இருக்கு...' - மாஸ்டர் ஆடியோ லான்ச் : விஜய் ரசிகர்களின் தெறி சப்போர்ட்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜய்யின் மாஸ்டர் ஆடியோ லான்ச் ட்விட்டரில் ட்ரென்ட் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் விஜய். தெறி, மெர்சல் என இவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நேற்று வருமான வரித்துறையினர் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். மேலும் ஃபைனான்சியர் அன்புசெழியன், தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் ஆகியோரது இடத்திலும் சோதனை நடந்தது. இதையடுத்து சோதனை முடிந்து வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில், விஜய்யிடம் அவரது சொத்துக்கள் மற்றும் சம்பளம் பற்றி மட்டுமே விசாரணை நடந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய் வீட்டில் இருந்து பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படாததால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் விஜய் பேச போகும் உரைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். இதனால் விஜய் ரசிகர்களின் #MasterAudioLaunch எனும் ஹேஷ்டேக் ட்ரென்ட் ஆகி வருகிறது. மேலும் #MrPerfectThalapathyVijay எனும் ஹாஷ்டேக்கும் ட்ரென்ட் அடித்து வருகிறது. விஜய் படத்துக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே, ஆடியோ லான்ச்சில் விஜய் பேசும் பேச்சுக்கு தனி ரசிகர்கள் உண்டு. அப்படியான மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் விஜய் பரபரப்பாக என்ன பேச போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.