'பிகில்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், தம்பி விஜய்க்கு அரசியல் ஆர்வம் இருக்கு. அவருக்கு மக்கள் கிட்ட ஒரு செல்வாக்கு இருக்கு.
அதனால அவர்கள் அச்சப்படுத்தி வைப்போம். அவர்கள் களமிறக்கும் போட்டியாளருக்கு இவர் போட்டியாக வந்து விடுவார் என்று அச்சப்பட்டிருக்கலாம். இதன் காரணமாக இந்த வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்'' என்றார்.
''விஜய்க்கு அரசியல் ஆசை இருக்கு அதனால...'' - சீமான் சரவெடி பேச்சு வீடியோ