விக்ரம் ரசிகரை மகிழ்ச்சியாக்கிய துருவ் - பிரபல இயக்குநரின் 'மாஸ்' கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Jan 04, 2020 01:40 PM
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள 'ஆதித்ய வர்மா' திரைப்படம் கடந்த வருடம் நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ரதன் இசையமைத்திருந்தார்.

தெலுங்கில் வெற்றி பெற்ற 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தை கிரீஸய்யா இயக்கியிருந்தார். இ4 எண்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரித்திருந்தது. ரவி.கே.சந்திரன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் துருவ்வுக்கு ஜோடியாக பனீட்டா மற்றும் பிரியா ஆனந்த் நடித்திருந்தனர்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநரான விக்ரம் ரசிகர் சரவண ஆனந்த் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், துருவ்வுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, இந்த அளவுக்கு இருப்பாப்லனு நான் நினச்சு பார்க்கல. துருவ் வேற லெவல்யா என்று பகிர்ந்திருந்தார். அதற்கு வாலு, ஸ்கெட்ச், சங்கத்தமிழன் படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் மாஸ் என்று தெரிவித்தார்.
@DhruvVikram8 mass https://t.co/pfeqkAbm8i
— vijay chandar (@vijayfilmaker) January 3, 2020