Veetla Vishesham Others Page USA

திருமணத்துக்கு பின் விக்கி - நயன் முதல் வெளிநாட்டு பயணம்.. எந்த நாட்டுக்கு போயிருக்காங்க?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருமணத்துக்கு பின் முதல்முதலாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் வெளிநாடு சென்றுள்ளனர்.

Vignesh Shivan Nayanthara Visiting Thailand first time after marriage

Also Read | "இனி இதயத்தில் இருந்து பேசும் முன் 2 முறை யோசிப்பேன்" சர்ச்சைக்கு சாய் பல்லவி விளக்கம்

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மாமல்லபுரத்தில் கடந்த (09.06.2022) அன்று நடைபெற்றது. அங்குள்ள செரேட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் & சினிமா துறை நண்பர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Vignesh Shivan Nayanthara Visiting Thailand first time after marriage

சிவாச்சாரியார்கள் தலைமையில் இந்த திருமணம் நடைபெற்றது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் பேருக்கு அன்று மதியம் கல்யாண விருந்தும் வழங்கப்பட்டது.

Vignesh Shivan Nayanthara Visiting Thailand first time after marriage

திருமணத்திற்கு பின் அடுத்த நாள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.  பின் கேரளாவில் உள்ள  செட்டி குளங்கரா கோயிலுக்கு சென்று ஜோடியாக  சாமி தரிசனம் செய்தனர்.  இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருமணம் முடிந்த பின் முதல்முறையாக தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் & போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Also Read | “என்ன மிமிக்ரியா…?”… தனுஷ் வெளியிட்ட ஜாலியான ‘திருச்சிற்றம்பலம்’ Glimpse… தந்தையர் தின ஸ்பெஷல்

திருமணத்துக்கு பின் விக்கி - நயன் முதல் வெளிநாட்டு பயணம்.. எந்த நாட்டுக்கு போயிருக்காங்க? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vignesh Shivan Nayanthara Visiting Thailand first time after marriage

People looking for online information on Nayanthara, Vignesh shivan, Vignesh Shivan Nayanthara Visiting Thailand will find this news story useful.